< Back
சினிமா செய்திகள்
கதாநாயகனாக அர்ஜுன் தாஸ்
சினிமா செய்திகள்

கதாநாயகனாக அர்ஜுன் தாஸ்

தினத்தந்தி
|
5 Aug 2023 9:26 AM IST

பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் கைதி படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து ரசிகர்கள் பாராட்டை பெற்றார். மாஸ்டர், விக்ரம் படங்களிலும் நடித்து இருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த அநீதி படத்தில் கதாநாயகனாக வந்தார்.

தற்போது 'ரசவாதி' என்ற பெயரில் தயாராகும் படத்திலும் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை சாந்தகுமார் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே மவுனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர்.

ரசவாதி படம் கிரைம், ரொமாண்டிக் ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராவதாக தெரிவித்து உள்ளனர். இதில் தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக வருகிறார். ரம்யா சுப்ரமணியம், ஜி.எம்.சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கிறார். சரவணன் இளவரசு, சிவகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்