அர்ஜுன் தாஸ் - அதிதி சங்கர் நடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
|அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ள புதிய படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி, போர் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். 'குட் நைட் ' மற்றும் 'லவ்வர்' திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு 'புரொடக்சன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்தது. ஹேஷம் அப்துல் வாகப் இந்தப் படத்திற்கு இசையமைப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இவரது இசையில் மலையாளத்தில் 'ஹ்ரிதயம்', தெலுங்கில் 'குஷி' போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் தற்போது தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
அதிதி ஷங்கர் ஏற்கனவே கார்த்தியின் விருமன், சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும், அதர்வாவின் சகோதரரான ஆகாஷ் முரளியுடன் இணைந்து நேசிப்பாயா எனும் திரைப்படத்தில் அதிதி சங்கர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பெயர் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு "ஒன்ஸ் மோர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
போஸ்டரில் இந்த படம் 2025 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.