< Back
சினிமா செய்திகள்
தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தயாரா...? காங்கிரசுக்கு குஷ்பு சவால்
சினிமா செய்திகள்

தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தயாரா...? காங்கிரசுக்கு குஷ்பு சவால்

தினத்தந்தி
|
19 May 2022 1:41 PM IST

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? என காங்கிரசுக்கு குஷ்பு சவால் விடுத்து உள்ளார்.

சென்னை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விடுதலை செய்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

பேரறிவாளன் விடுதலையான பிறகு முதல்-அமைச்சர் அவரை கட்டி அணைக்கிறார். ஆனால் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா?முதல்-அமைச்சரின் செயலை உங்களால் கண்டிக்க முடியுமா...? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது. என குஷ்பு கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்