என்னை கேலி செய்வதா? 2-வது திருமணம் செய்யும் நடிகை வருத்தம்
|2-வது திருமணம் செய்யும் என்னை பலர் கேலி செய்வது வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள் இது வருத்தம் அளிக்கிறது என்று பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்பாஸ் கானை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த 50 வயதான பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா 2-வது திருமணத்துக்கு தயாராகி வருகிறார். தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரை விரைவில் மணக்க இருக்கிறார். ஷாருக்கானின் உயிரே படத்தில் தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் மலைக்கா.
இந்த வயதில் உங்களுக்கு இரண்டாவது திருமணம் தேவையா என்று மலைக்கா அரோராவை விமர்சித்தும், கேலி செய்தும் பலர் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு பதில் அளித்து மலைக்கா அரோரா கூறும்போது, "ஆண்கள் விவாகரத்து செய்து விட்டு எத்தனை திருமணம் செய்தாலும் அவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது. விவாகரத்து செய்து திருமணம் செய்து கொள்ளும் நடிகர்களும் மதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் ஒரு பெண் விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்தால் அவளை கீழ்த்தரமாக பார்க்கும் எண்ணம் தான் இந்த சமூகத்தில் இருக்கிறது. விவாகரத்தான பெண்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் என்னைப் பற்றிய மோசமான விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் குவிகின்றன. இது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் அதனை கடந்து சென்று விடுகிறேன்'' என்றார்.