'கோட்' படத்தின் சூப்பர் ஸ்பெஷல் அப்டேட் இந்த மாதம் வெளியாகிறது
|'கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. 'கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
வருகிற 22-ந்தேதி நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் ஸ்பெஷல் அப்டேட்டுகள் இந்த மாதம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், "சிறப்பு மாதம் என்பதால், இந்த மாதம் சில சூப்பர் ஸ்பெஷல் அப்டேட்டுகள் கண்டிப்பாக வரும்" என்று தெரிவித்துள்ளார்.