< Back
சினிமா செய்திகள்
அஜித்துக்கு வில்லனாக அரவிந்தசாமி?
சினிமா செய்திகள்

அஜித்துக்கு வில்லனாக அரவிந்தசாமி?

தினத்தந்தி
|
8 Jan 2023 8:18 AM IST

அஜித்குமார் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் இதில் வில்லனாக நடிக்க அரவிந்தசாமியிடம் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது.

அஜித்குமார் நடித்துள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்க உள்ள இதர நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது. கதாநாயகியாக நயன்தாரா அல்லது திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது காஜல் அகர்வால் பெயர் அடிபடுகிறது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அரவிந்தசாமியிடம் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது. அரவிந்தசாமி தனி ஒருவன் படத்தில் ஸ்டைலான வில்லனாக வந்து தன்னை நிரூபித்து இருந்தார். இப்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்துள்ளது. அஜித்தின் கதாபாத்திரமும் வில்லதனமாகவே இருக்குமாம். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. காமெடியில் இருந்து கதாநாயகனாக மாறி நடித்து வரும் சந்தானம் இப்போது மீண்டும் நகைச்சுவை வேடத்துக்கு திரும்புகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு அஜித் பைக்கில் உலகை சுற்றி வர முடிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்