< Back
சினிமா செய்திகள்
அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியானது

image courtecy:twitter@thinkmusicindia

சினிமா செய்திகள்

அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
30 March 2024 11:43 AM GMT

அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படம் வெளியாவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்