< Back
சினிமா செய்திகள்
அரண்மனை 4 திரைப்படம் இந்தியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'அரண்மனை 4' திரைப்படம் இந்தியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
15 May 2024 9:18 PM IST

'அரண்மனை 4' திரைப்படம் இதுவரை ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை,

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கி வைத்ததில் 2014-ல் வெளிவந்த 'அரண்மனை' படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. இதன் தொடர்ச்சியாக 2016-ல் 'அரண்மனை 2', 2021-ல் 'அரண்மனை 3' படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த வரிசையில் 'அரண்மனை 4' படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, வி.டி.வி. கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். கடந்த 3 -ந்தேதி திரையரங்குகளில் வெளியான 'அரண்மனை 4' வசூலை குவித்து வருகிறது. இதுவரை ரூ.70 கோடிக்கும் மேல் 'அரண்மனை 4' திரைப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'அரண்மனை 4' திரைப்படம் இந்தியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'அரண்மனை 4' திரைப்படம் வருகிற 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்