'அரண்மனை 4' படம் : 4 நாட்களில் ரூ. 22 கோடி வசூல்
|இயக்குநர் சுந்தர் சி எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘அரண்மனை 4' திரைப்படம் 4 நாட்களில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.
பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் நடித்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் 'அரண்மனை 4' படம் உருவாகியது.
இப்படத்தின் முந்தைய 3 பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.இந்நிலையில் கடந்த 3 -ந்தேதி 'அரண்மனை 4' படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. இப்படம் வெளியான தியேட்டர்களில் "ஹவுஸ்புல்" காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இப்படம் முதல் நாளில் நாளில் ரூ 4.65 கோடி வசூலித்தது, 2- வது நாளில் ரூ 6.65 கோடி வசூலித்தது. 3- வது நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.7.85 கோடி வசூல் செய்தது. 4- ம் நாளான நேற்று ரூ 3 கோடியை வசூலித்தது. இப்படத்தின் நான்காம் நாள் வசூல் இந்தியாவில் ரூ.19.15 கோடியும் உலகம் முழுவதும் ரூ.22 கோடியும் வசூல் சாதனை படைத்து உள்ளது.