அனிருத்திற்கு எதிராக ரசிகர்களின் கோபத்தை தூண்டியதா ஏ.ஆர்.ரகுமானின் பதிவு?
|கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 12-ம் தேதி வெளியான படம் இந்தியன் 2. இப்படம் வெளியாகி முதல் பாகம் அளவுக்கு நல்ல விமர்சனங்களை பெறவில்லை.
இப்படம் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர், முதல் பாகத்தின் பின்னணி இசையை இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியானபின், படத்தினால் மட்டுமல்ல இசையினாலும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் இந்தியன் முதல் பாகம் அளவுக்கு இதில் இசை அமையவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தான் இசையமைத்து பிலிம்பேர் விருது வென்ற பொன்னியின் செல்வன் இசை ஆல்பத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த பதிவு அனிருத்திற்கு எதிராக ரசிகர்களின் கோபத்தை தூண்டியதாக தெரிகிறது. அந்த பதிவின் கருத்து பகுதியில் இருவரது ரசிகர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.