ஏ.ஆர். ரகுமான் காலில் விழுந்து ஆசி பெற்ற ராப் பாடகர்; வைரலான வீடியோ
|ஐ.ஐ.எப்.ஏ. விழா ஒத்திகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் காலில் விழுந்து பஞ்சாபி பாடகர் ஹனி சிங் ஆசி பெறும் வீடியோ வைரலாகி வருகிறது.
அபுதாபி,
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா (ஐ.ஐ.எப்.ஏ.) அபுதாபியில் உள்ள யாஸ் ஐலேண்டில் எத்திஹாட் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை நடிகர்கள் சல்மான் கான், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் மணீஷ் பால் ஆகியோர் முன்னின்று தொகுத்து வழங்குகின்றனர்.
இதில், நடிகர் நடிகைகளான ரன்வீர் சிங், கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான், வருண் தவான், அனன்யா பாண்டே, திவ்யா கோஸ்லா குமார் மற்றும் நோரா பதேஹி உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.
இந்த விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் பஞ்சாப்பை சேர்ந்த ராப் இசை பாடகரான ஹனி சிங் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். மேடையில் பாடல்களை பாடியபடி இருந்த அவர் பின்பு கீழே இறங்கி நடந்து சென்று பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் காலில் விழுந்து வணங்கினார்.
அவரை வாழ்த்திய ஏ.ஆர். ரகுமான், ஹனி சிங் எழுந்ததும் அவருக்கு கைகொடுத்து புன்முறுவலும் செய்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹனி சிங் வெளியிட்டு உள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் சாருடனான எனது வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என அதில், தலைப்பிட்டு உள்ளார். இந்நிகழ்ச்சியில் தங்க பல்லி போன்ற நெக்லெஸ் ஒன்றை ஹனி சிங் அணிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
அவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுடன் ஒன்றாக நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் ஜாக்குலின் வெளியிட்டு உள்ளார்.
இந்த விழாவில் குரு ரந்தாவா, புஷ்பா பட இசையமைப்பாளர் மற்றும் பாடகரான தேவி ஸ்ரீ பிரசாத், தனிஷ்க் பக்சி, நேஹா கக்கர் மற்றும் துவானி பானுஷாலி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.