< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஐ.நா. தலைமையகத்தில் ஏ.ஆர்.ரகுமான்- வைரலாகும் புகைப்படம்
|10 Oct 2023 4:08 PM IST
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சென்றுள்ளார்
சென்னை,
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அவர் எதற்காக ஐ.நா. சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐ.நா.வில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.
— A.R.Rahman (@arrahman) October 9, 2023