< Back
சினிமா செய்திகள்
கேலி செய்த நடிகைக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்
சினிமா செய்திகள்

கேலி செய்த நடிகைக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்

தினத்தந்தி
|
29 April 2023 7:53 AM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் நடந்த விழாவொன்றில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது சாய்ரா பானுவை நிகழ்ச்சி தொகுப்பாளர் பேச அழைத்தார். அவர் பேசுவதற்கு முன்பாக, 'இந்தியில் பேச வேண்டாம். தமிழில் பேசுங்கள்' என்று ஏ.ஆர்.ரகுமான் கேட்டுக்கொண்டார்.

சாய்ரா பானுவும் தனக்கு தமிழ் சரியாக பேச வராது என்று சொல்லி ஆங்கிலத்தில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி, 'என்னது ஏ.ஆர்.ரகுமான் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டில், குடும்பத்தில் என்ன மொழியில் பேசுவாங்க...' என கேட்டு டுவிட்டரில் பதிவு வெளியிட்டார். இது பரபரப்பானது.

கஸ்தூரியின் பதிவு ஏ.ஆர்.ரகுமானை கேலி செய்வதுபோல் இருப்பதாக வலைத்தளத்தில் பலர் பேசினர். இந்த நிலையில் கஸ்தூரிக்கு பதில் அளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் 'காதலுக்கு மரியாதை' என்று இரண்டே வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரியின் கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் கோபப்படாமல் நாசுக்காக பதில் அளித்து இருப்பதாக வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்