நடிகர் ரஜினிகாந்துடன் ஏ.ஆர்.ரகுமான் சந்திப்பு
|ரஜினிகாந்தை ஏ.ஆர்.ரகுமான் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'லால் சலாம்' படத்துக்கான இசை பணிகளை ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி அது சம்பந்தமான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தை ஏ.ஆர்.ரகுமான் சந்தித்துள்ளார். லால் சலாம் படத்தின் இசைப்பணிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் சந்திப்பு மற்றும் அவர்களோடு செல்பி எடுத்துகொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த வருடம், இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளன.