< Back
சினிமா செய்திகள்
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய தேதியை அறிவித்த ஏ.ஆர்.ரகுமான்..!
சினிமா செய்திகள்

'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய தேதியை அறிவித்த ஏ.ஆர்.ரகுமான்..!

தினத்தந்தி
|
18 Aug 2023 5:54 PM IST

'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய தேதியை ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை பனையூரில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த 12-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்று பெய்த மழையின் காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் நீர் தேங்கியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய தேதியை ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை பனையூரில் செப்டம்பர் 10-ந்தேதி இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் முன்னதாக பெற்ற டிக்கெட்டுக்களை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றும் அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்