< Back
சினிமா செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படப்பணிகள் தொடக்கம்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படப்பணிகள் தொடக்கம்

தினத்தந்தி
|
14 Feb 2024 8:03 PM IST

‘எஸ்.கே.23’ என அழைக்கப்படும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். ‘

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது 'தர்பார்'. இப்படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது தனது புதிய படத்தை தொடங்கியுள்ளார்.

'எஸ்.கே.23' என அழைக்கப்படும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். 'சப்த சாகரதாச்சே எல்லோ' கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான வரும் 17-ம் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்