< Back
சினிமா செய்திகள்
சல்மான்கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - புதிய பட டைட்டில்  அறிவிப்பு
சினிமா செய்திகள்

சல்மான்கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - புதிய பட டைட்டில் அறிவிப்பு

தினத்தந்தி
|
11 April 2024 5:14 PM IST

ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கான் புதிய படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன்' படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது தனது அடுத்த புதிய படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார் .

அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது .இந்நிலையில் இன்று ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கான் புதிய படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி , இந்த படத்துக்கு 'சிக்கந்தர்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்