கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் 'அக்வாமேன்-2'
|இரண்டாம் பாகம் 'அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்' என்ற பெயரில் தயாராகி உள்ளது.
'அக்வாமேன்' ஹாலிவுட் படம் 2018-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன. உலகம் முழுவதும் நல்ல வசூல் குவித்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகம் 'அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்' என்ற பெயரில் தயாராகி உள்ளது. ஜேம்ஸ் வான் இயக்கி உள்ளார். இதில் ஜேசன் மோமோவா, நிக்கோல் கிட்மேன், பேட்ரிக், வில்சன், ஆம்பர் ஹியர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் பல மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அக்வாமேன் 2-ம் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
ஆபத்தில் இருக்கும் அட்லாண்டிஸ் ராஜ்ஜியத்தையும் தனது குடும்பத்தையும் அக்வாமேன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது திரைக்கதையாக அமைக்கப்பட்டு உள்ளது.