'அப்பா எனக்கு நாயகன்' - கவனம் ஈர்க்கும் 'திருவின் குரல்' படத்தின் பாடல்
|அருள்நிதி நடித்துள்ள 'திருவின் குரல்' திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார். ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'அப்பா என் அப்பா' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடலை மது பாலகிருஷ்ணன் பாடியுள்ளார். அப்பா, மகனுக்கு இடையிலான பாசத்தை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'திருவின் குரல்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.