மலையாளத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா..!
|நடிகை அனுஷ்கா தற்போது முதல் தடவையாக மலையாள படமொன்றில் அறிமுகமாக இருக்கிறார்.
சென்னை,
அருந்ததி பேய் படத்தில் நடித்து பிரபலமான அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா ஆகியோருடன் நடித்துள்ளார்.
அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் பாகுபலி முக்கிய படமாக அமைந்தது. இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி நடித்து பின்னர் குறைக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன.
அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தொடர்ந்து கிசுகிசுக்களும் வருகின்றன. இந்தநிலையில் இதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் கொடி கட்டி பறந்த அனுஷ்கா தற்போது முதல் தடவையாக மலையாள படமொன்றில் அறிமுகமாக இருக்கிறார்.
இந்தப்படத்தை 'ஹோம்' படத்தை இயக்கிய பிரபலமான ரோஜின் தாமஸ் இயக்க இருக்கிறார். இதில் மலையாள நடிகர் ஜெயசூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடிக்க இருக்கிறார்.
இந்தப்படம் சரித்திர கதையம்சம் கொண்ட இரண்டு பாகங்களாக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.