சொந்த ஊர் பூதக்கோலா விழாவில் அனுஷ்கா
|நடிகை அனுஷ்கா தனது சொந்த ஊரான மங்களூரில் நடந்த பூதக்கோலா திருவிழாவில் கலந்து கொண்டார்.
சினிமா துறையில் தற்போது பரபரப்பாக பேசப்படும் படம் 'காந்தாரா'. ரிஷப் செட்டி கதாநாயகனாக நடித்து இயக்கி இருந்தார். இந்த படம் கன்னட மொழியில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூல் குவித்தது.
சில இடங்களில் 'கே.ஜி.எப்.' போன்ற பெரிய படங்களை கூட தாண்டி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பூதக்கோலா உள்ளூர் தெய்வ வழிபாடு பற்றி நாடு முழுவதும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தனது சொந்த ஊரான மங்களூரில் நடந்த பூதக்கோலா திருவிழாவில் கலந்து கொண்டார். எடையை குறைத்து ஒல்லியாக மாறி பட்டுப்புடவையில் சாமி கும்பிட்ட அனுஷ்காவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின்றன.
அனுஷ்கா நிசப்தம் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. வெளியே எங்கேயும் அவரை பார்க்கவும் முடியவில்லை. இந்த நிலையில் பூதக்கோலா திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்று இருக்கிறார்.