< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'லாக் டவுன்' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது
|1 Jun 2024 2:02 AM IST
லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள 'லாக் டவுன்' படத்தை ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
சென்னை,
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது 'லாக் டவுன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 'லாக் டவுன்' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் 'பரதா' என்ற படத்தில் நடிக்கிறார்.