< Back
சினிமா செய்திகள்
அனுபமா நடித்துள்ள லாக்டவுன் படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

அனுபமா நடித்துள்ள 'லாக்டவுன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
12 Jun 2024 10:23 PM IST

லாக் டவுன்' படத்தின் 'லாவா லாவா' என்ற முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது

சென்னை,

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது 'லாக் டவுன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 'லாக்டவுன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் 'லாக் டவுன்' படத்தின் 'லாவா லாவா' என்ற முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது.பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்த பாடலை பிரியா ஜெர்சன் பாடியுள்ளார். 'லாக் டவுன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்