< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

நடிகை அனுபமாவின் 'பரதா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
26 April 2024 7:14 PM IST

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள 'பரதா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கான்செப்ட் வீடியோ வெளியாகியுள்ளது.

'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் 'கொடி' படத்தில் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார். அனுபமா நடிப்பில் வெளியான 'கார்த்திகேயா - 2' , '18 பேஜஸ்' டில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் தன் சம்பளத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1.20 கோடியாக அனுபமா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியது. அனுபமா பரமேஸ்வரன் 'டில்லு ஸ்க்வேயர்' என்ற தெலுங்கு படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததை பலரும் அவதூறாக விமர்சித்தனர்.

இந்நிலையில் அனுபமா தனது இன்ஸ்டாவில் 'பரதா' என்ற புதிய படத்தின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார். 'பரதா' படத்தின் கான்செப்ட் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்