படம் இயக்க வரும் அனுபமா பரமேஸ்வரன்
|முன்னணி டைரக்டர்களிடம் பணியாற்றி தொழில் நுட்ப ரீதியாக சில விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகு படம் டைரக்டு செய்ய வருவேன்'' என நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் கொடி, தள்ளிப்போகாதே ஆகிய படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு காதல் கதைகளில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. தொடர்ந்து ஏதோ ஒரு காதல் கதையில் நடித்துக் கொண்டே இருக்கிறேன். காதல் படங்களை எப்போதும் தயாரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. இப்போது வரை நான் நடித்த காதல் படங்களில் "18 பேஜஸ்" படம் மிகவும் சிறந்த படம். இதில் நந்தினி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு டைரக்டராக ஆசை உள்ளது. நிச்சயம் படம் டைரக்டு செய்வேன். டைரக்டர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு ஒரு ஆண்டு நடிப்புக்கு முழுமையாக இடைவெளி கொடுத்து விட திட்டமிட்டு உள்ளேன். கதாநாயகியாக நான் இன்னும் நடிக்க வேண்டி உள்ளது. அதனால் இப்போது நடிப்பின் மீதுதான் கவனம் உள்ளது. சில கதைகள் மனதில் உள்ளது. முன்னணி டைரக்டர்களிடம் பணியாற்றி தொழில் நுட்ப ரீதியாக சில விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகு படம் டைரக்டு செய்ய வருவேன்'' என்றார்.