காதலில் அனுபமா
|அனுபமா தற்போது அளித்துள்ள பேட்டியில் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்து உள்ளார்.
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனும், கிரிக்கெட் வீரர் பும்ராவும் நெருங்கி பழகுவதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
டுவிட்டரில் அனுபமா வெளியிடும் புகைப்படங்கள் தனக்கு பிடித்து இருப்பதாக பும்ரா உடனுக்குடன் பதிவு செய்து வந்தார். அதுபோல் பும்ரா போடும் புகைப்படங்களையும் அனுபமா லைக் செய்தார்.
அனுபமா கூறும்போது, "எனக்கும், பும்ராவுக்கும் காதல் என்று தகவல்கள் பரவி வருகின்றன. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் இல்லை" என்றார்.
இந்த நிலையில் அனுபமா தற்போது அளித்துள்ள பேட்டியில் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, "நான் இப்போது தனியாக இல்லை. எனது வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார்'' என்றார்.
காதலர் யார் என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்.