< Back
சினிமா செய்திகள்
கதைகளை தேர்வு செய்வதில் கார்த்தி கெட்டிக்காரர் -   நடிகை அனு இம்மானுவேல்
சினிமா செய்திகள்

கதைகளை தேர்வு செய்வதில் கார்த்தி கெட்டிக்காரர் - நடிகை அனு இம்மானுவேல்

தினத்தந்தி
|
7 Nov 2023 4:20 PM IST

ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அனு இம்மானுவேல் கார்த்தியை பற்றி பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கார்த்தியை பார்த்து நான் ஒரு விஷயத்தை கற்று கொண்டேன்.

அது என்னவென்றால், படத்தின் கதையை தேர்ந்து எடுத்து நடிப்பதில் தான். அவர் தேர்வு செய்து நடித்து வரும் படங்களின் கதை எல்லாம் வித்தியாச வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை அவர் கதைகளை தேர்வு செய்யும் விதத்தை நான் ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன். அவர் இந்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கெட்டிக்காரர்.

அவரை பார்த்து தான் நானும் கதைகளை தேர்வு செய்து நடிக்கலாம் என்பதனை கற்றுக்கொண்டேன். ஜப்பான் படத்தில் அவருடன் நடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் நன்றாக வந்திருக்கிறது. படமும் மிகவும் அருமையாக இருக்கும் கண்டிப்பாக மக்கள் அனைவருக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் எனவும் அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்