இன்னொரு தெலுங்கு நடிகர் விவாகரத்து?
|தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை விவாகரத்து செய்துள்ள நிலையில், தமிழில் விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான தெலுங்கு நடிகை நிஹரிகாவும் நேற்று முன்தினம் கணவர் சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணும் தனது மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. பவன் கல்யாண் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். ஜனசேனா கட்சியை தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
51 வயதாகும் பவன் கல்யாண் 1997-ல் நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். 2009-ல் ரேணு தேசாய் என்பவரை மணந்து அவரையும் பிரிந்தார். பின்னர் ரஷ்ய மாடல் அழகி அன்னா லெஷ்னேவாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது 3-வது மனைவியையும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவி உள்ளது. ஆனாலும் பவன் கல்யாண் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.