< Back
சினிமா செய்திகள்
பிரபாசுக்கு போட்டியாக இன்னொரு ராமாயணம் படம்
சினிமா செய்திகள்

பிரபாசுக்கு போட்டியாக இன்னொரு ராமாயணம் படம்

தினத்தந்தி
|
22 Oct 2022 8:05 AM IST

பிரபாசுக்கு போட்டியாக இன்னொரு ராமாயணம் படம் வரும் என தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அறிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

ராமாயண கதையை மையமாக வைத்து பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் படம் தயாராகி வருகிறது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே மிகப்பெரிய படமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ராமாயணம் படத்தை எடுப்போம் என தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அறிவித்து இருந்தார். அதன்பிறகு இந்த படம் சம்பந்தமாக எந்த தகவலும் வரவில்லை.

பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் படம் தயாராவதால் ராமாயண படத்தை அல்லு அரவிந்த் கைவிட்டுவிட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அல்லு அரவிந்த் தற்போது அளித்துள்ள பேட்டியில், ''நாங்கள் அறிவித்த ராமாயணம் படம் நின்றுவிடவில்லை. ஒன்றரை வருடமாக தயாரிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஆறு மாதத்துக்குள் இந்த பணி முடிவடைந்துவிடும். அடுத்த ஆண்டு ராமாயணம் படப்பிடிப்பு தொடங்கிவிடும். இந்த படம் முடிவடையும்போது இந்தியாவிலேயே இது ஒரு பெரிய சினிமா படமாகவும், பெரிய பட்ஜெட்டில் எடுத்த படமாகவும் இருக்கும்.

ராமாயணம் படத்தை நாங்கள் எடுக்க போவதாக அறிவித்த நேரத்தில் பட்ஜெட் ரூ.500 கோடி. இப்போது இந்த மதிப்பீடு இன்னும் அதிகமாகும். இரட்டிப்பு ஆனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. ஆனால் படம் எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் நடைபெறுகின்றன" என்றார்.

மேலும் செய்திகள்