< Back
சினிமா செய்திகள்
தமிழில் இன்னொரு மலையாள நடிகை
சினிமா செய்திகள்

தமிழில் இன்னொரு மலையாள நடிகை

தினத்தந்தி
|
4 May 2023 6:09 AM IST

தமிழுக்கு வந்துள்ள மலையாள நடிகைகள் பட்டியலில் அஹானா கிருஷ்ணாவும் இணைகிறார். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கிருஷ்ண குமாரின் மகள். அஹானா மலையாளத்தில் 'ஜன் ஸ்டீவ் லோபெஷ்' படம் மூலம் அறிமுகமானார். 'ஜண்டுகலுடே நட்டில் ஒரிடவேள'. 'லூகா' 'பதினெட்டாம்படி', 'பிடிக்கட்டாபுல்லி' ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது அஹானா கதாநாயகியாக நடித்து 'அடி' என்ற மலையாள படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை துல்கர்சல்மான் தயாரித்துள்ளார். இது வெற்றிகரமாக ஓடி அஹானா நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுக்கொடுத்து இருக்கிறது.இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. விரைவில் தமிழ் படத்தில் அறிமுகமாக இருக்கிறார். "தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் நல்ல கதை மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறேன்'' என்று அவர் கூறினார்.

தற்போது மலையாளத்தில் 'நான்சி ராணி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்