'ஈரம்' பட கூட்டணியில் மீண்டும் ஒரு திகில் படம்...
|ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமனின் இசையில் 'மழையே மழையே' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்திற்கு 'சப்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படமும் 'ஈரம்' படத்தைப் போல திகில் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது.
Need all your best wishes as we begin this new journey today#SABDHAM - The sound that's never heard!
Team #Eeram reunites!@dirarivazhagan @MusicThaman @7GFilmsSiva @Aalpha_frames @Dop_arunbathu @EditorSabu @Manojkennyk @stunnerSAM2 @Viveka_Lyrics @Synccinema pic.twitter.com/rgU5UY43VR