இன்னொரு சரித்திர படம்
|பல சரித்திர படங்கள் வந்துள்ள நிலையில் தற்போது `சுயம்பு' என்ற பெயரில் இன்னொரு சரித்திர படம் உருவாகிறது. இதில் நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. பரத் கிருஷ்ணமாச்சாரி டைரக்டு செய்கிறார்.
`சுயம்பு' என்றால் தானாக உருவானது என்று அர்த்தம். கதைக்கு பொருத்தமாக இருந்ததால் இந்த பெயரை வைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் நிகில் சித்தார்த் போர்க்களத்தில் ஒரு கையில் ஈட்டி இன்னொரு கையில் கேடயத்துடன் ஆவேசமாக நிற்கும் வீரன் தோற்றத்தில் இருக்கிறார்.
இந்தப் படம் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு நடந்த கதையாக உருவாகிறது என்றும், ஒரு பேரரசின் பொற்காலம் தொடங்கியதை பற்றி படம் பேசும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளனர். மனோஜ் பரமஹம்சர் ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். புவன், ஶ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.