இன்னொரு நடிகர் பாலியல் புகார்
|சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள். தற்போது நடிகர்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு தமிழில் மோனிசா என் மோனாலிசா படத்திலும், தெலுங்குப்படங்களிலும் நடித்துள்ள ரவி கிஷன் தன்னை ஒரு பெண் தவறான நோக்கத்தில் அழைத்ததாகவும் நான் மறுத்துவிட்டேன் என்றும் கூறினார். தற்போது இளம் இந்தி நடிகரான சிவதாக்கரேவும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் ஒரு படத்தில் நடிக்க நடிகர் தேர்வுக்கு சென்றபோது அந்தப்படத்தின் இயக்குனர் என்னை மசாஜ் சென்டருக்கு அழைத்தார். அவரது நோக்கம் புரிந்து மறுத்துவிட்டேன். இன்னொரு தடவை ஒரு பெண் இரவு 11 மணிக்கு நடிகர் தேர்வு இருக்கிறது வா என்று அழைத்தார்.
அவருக்கு 4 பங்களாக்கள் இருப்பதாகவும் எத்தனையோ பேரை பெரிய நடிகர்களாக உருவாக்கியதாகவும் பெருமையாகப்பேசினார். நான் இரவு வரமுடியாது என்றேன். உடனே அந்தப்பெண் நீ ராத்திரி வேலைக்கு வராவிட்டால் உனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்று மிரட்டினார். ஆனாலும் நான் உடன்படவில்லை'' என்றார்.