'தலைவர் 170' படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என அறிவிப்பு
|நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த், ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா ரகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தலைவர் 170 என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த், நாளை தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, 'தலைவர் 170' படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.