சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு..!
|சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர், டான்' படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து வந்த 'பிரின்ஸ்' திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கில் 'மகாவீருடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'மாவீரன்' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி 'சீனா சீனா' என்ற பாடல் வருகிற 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.