அஞ்சலியின் 50-வது படம்
|ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. 2007-ல் வெளியான இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்து இருந்தார். அங்காடித்தெரு படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூல் பார்த்தது.
எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு பேசப்பட்டது. ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, பலுபு, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 என்று நிறைய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் குறித்து விவரங்கள் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அஞ்சலிக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.