< Back
சினிமா செய்திகள்
அஞ்சலியின் 50-வது படம் ஈகை - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

அஞ்சலியின் 50-வது படம் 'ஈகை' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
28 May 2023 7:44 PM IST

‘ஈகை’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இவர் நடித்த அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

தொடர்ந்து கலகலப்பு, மங்காத்தா, ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி உள்ளிட்ட பல்வேறு படங்களில் அஞ்சலி நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் அஞ்சலி நடிக்கும் 50-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஈகை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் வேலாயுதம் இயக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். தரண் குமார் இசையமைக்கிறார். 50-வது படத்தில் நடிக்கும் அஞ்சலிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


#Eegai ⚖️ pic.twitter.com/5oUYSW0J40

— Anjali (@yoursanjali) May 27, 2023 ">Also Read:


மேலும் செய்திகள்