< Back
சினிமா செய்திகள்
50-வது படத்தால் அஞ்சலி நெகிழ்ச்சி
சினிமா செய்திகள்

50-வது படத்தால் அஞ்சலி நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
27 Sept 2023 6:41 AM IST

நடிகை அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகை அஞ்சலி ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடித்து பெயரும் புகழும் பெற்றார். அவர் அறிமுகமான முதல் படமான கற்றது தமிழ் 2007-ல் வெளியானது. அங்காடி தெரு படம் திருப்புமுனையாக அமைந்தது. அஜித்குமாரின் மங்காத்தா படத்திலும் நடித்து இருந்தார்.

கலகலப்பு, அரவான், இறைவி, பலூன், நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்துக்கு கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஏற்கனவே அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கீதாஞ்சலி பேய் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு மொழியில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

அஞ்சலி நெகிழ்ச்சியோடு கூறும்போது, "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி" படத்தின் மூலம் எனது 50-வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 16 ஆண்டுகளாக எனது உயர்விலும் தாழ்விலும் பயணித்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.

மேலும் செய்திகள்