< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரீ-ரிலீசாகும் 'அஞ்சான்' திரைப்படம் - இயக்குனர் லிங்குசாமி கொடுத்த அப்டேட்
|28 March 2024 10:47 PM IST
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார்.
சென்னை,
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் சார்பில் லிங்குசாமி இதனை தயாரித்திருந்தார். இந்த படத்தில் சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் 'அஞ்சான்' திரைப்படத்தை தற்போது 'ரீ எடிட்' செய்து வருவதாகவும் விரைவில் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என்றும் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார். முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல பழைய திரைப்படங்கள் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.