முதல் காதல் தோல்வியில் முடிந்தது ஏன்? - மனம் திறந்த அனிருத்
|எங்கள் காதல் தோல்விக்கு முக்கிய காரணம் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம்தான் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவர் நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, கத்தி, காக்கிச் சட்டை, ஜெயிலர், பிகில், லியோ, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜவான் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். தற்போது தலைவர் 171 படத்திலும், இந்தியன் 2 படத்திலும் இசையமைத்து வருகிறார்.
தற்போது ராக்ஸ்டாராக திகழ்ந்து வரும் அனிருத், ஒரு காலகட்டத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதில் ஒன்றுதான் நடிகை ஆண்ட்ரியா உடனான காதல் சர்ச்சை. இருவரும் உருகி உருகி காதலித்து வந்த நிலையில், சுச்சி லீக்ஸ் மூலம், அவர்கள் இருவரும் நெருக்கமாக லிப்லாக் கிஸ் அடித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.
தங்களின் காதல் தோல்வியில் முடிந்தது ஏன்? என்பது பற்றி அனிருத்தே நேர்காணல் ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் நீங்கள் காதலித்த நடிகை யார்? அவரின் பெயரையும் காதல் தோல்விக்கான காரணத்தையும் ஏன் வெளியிடவில்லை என்று ஓப்பனாக கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அனிருத், அந்த காதலி பெயர் ஆண்ட்ரியா. 19 வயதில் நான் அவரை காதலித்தேன். என்னுடைய முதல் காதலும் அவர்தான். அப்போது ஆண்ட்ரியாவுக்கு 25 வயது. எங்கள் காதல் தோல்விக்கு முக்கியமான காரணம் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம்தான். ஆண்ட்ரியா என்னைவிட 6 வயது மூத்தவராக இருந்ததால் இருவருக்கும் செட் ஆகவில்லை. பிரிந்துவிட்டோம் என கூறி இருக்கிறார்.