'வேட்டையன்' சிங்கிள்: அப்டேட் கொடுத்த அனிருத்
|'வேட்டையன்' படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட்டை அனிருத் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.
அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வரும்நிலையில், நேற்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். அதன்படி, அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
அதேதேதியில்தான், சூர்யாவின் 'கங்குவா' படமும் வெளியாக உள்ளது. இதனால் இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில், வேட்டையன் படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட்டை அனிருத் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'வேட்டையன் பாடல் விரைவில்' என்று பதிவிட்டுள்ளார்.