< Back
சினிமா செய்திகள்
விலங்குநல ஆர்வலர்கள் எதிர்ப்பு... தனுஷ் படப்பிடிப்பில் சிக்கல்
சினிமா செய்திகள்

விலங்குநல ஆர்வலர்கள் எதிர்ப்பு... தனுஷ் படப்பிடிப்பில் சிக்கல்

தினத்தந்தி
|
24 March 2023 7:47 AM IST

'திருச்சிற்றம்பலம்', 'வாத்தி' படங்களை தொடர்ந்து தனுஷ் 'கேப்டன் மில்லர்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அருகில் அரங்குகள் அமைத்து நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு காரணாக விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக விலங்குகள்நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். "புலிகள் காப்பகத்துக்கு அருகில் உயர் பீம் விளக்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதனால் யானை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறப்பட்டு உள்ளதா? என்று தெரியவில்லை. அங்குள்ள கால்வாயையும் சேதப்படுத்தி உள்ளனர்'' என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வனத்துறைக்கு புகாரும் அனுப்பி உள்ளனர். இதனால் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்