1980-களில் பிரபலமான நடிகர், நடிகைகள் சந்திப்பு
|1980-களில் பிரபலமான நடிகர், நடிகைகள் சந்திப்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.
திரையுலகில் 1980-களில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகர்-நடிகைகள் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். 2019-ல் ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவி இல்லத்தில் 10-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சந்திப்பு நடக்கவில்லை. இந்த நிலையில் மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தற்போது 80-களின் நடிகர் நடிகைகளின் சந்திப்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்தி நட்சத்திரங்களான பூனம் தில்லான், ஜாக்கி ஷெராப் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து தென்னிந்திய நடிகர் நடிகைகளுக்கு விருந்து அளித்து உபசரித்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் நடந்தன. உணவுகள் பரிமாறப்பட்டன. நடிகர் நடிகைகள் அனைவரும் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், அர்ஜுன், ராஜ்குமார், சிரஞ்சீவி, வெங்கடேஷ், சஞ்சய்தத், சன்னி தியோல், நரேஷ், அனில்கபூர், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், லிசி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, நதியா, வித்யா பாலன், மீனாட்சி சேஷாத்திரி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மாதவனும் பங்கேற்று அனைவரையும் வாழ்த்தினார்.