சினிமா செய்திகள்
கவர்ச்சி படங்களை வெளியிடும்  என்னை அறிந்தால் பட நடிகை அனிகா

image courtecy:instagram@anikhasurendran

சினிமா செய்திகள்

கவர்ச்சி படங்களை வெளியிடும் 'என்னை அறிந்தால்' பட நடிகை அனிகா

தினத்தந்தி
|
7 April 2024 6:52 AM IST

அனிகாவின் சமீபத்திய கவர்ச்சி படங்கள் வைரலாகி வருகின்றன.

சென்னை,

2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்...' படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து 'நானும் ரவுடிதான்', 'மிருதன்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான 'புட்டபொம்மா' படத்தில் கதாநாயகியாக அனிகா அறிமுகம் ஆனார். மலையாள படங்களில் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.மலையாளத்தில் 'சின்ன நயன்தாரா' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அனிகா, அவ்வப்போது தனது கலக்கல் புகைப்படங்களை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு வருகிறார். இதற்கிடையில் அனிகா கவர்ச்சி படங்களை வெளியிட தொடங்கி இருக்கிறார்.

அந்தவகையில் அவரது சமீபத்திய கவர்ச்சி படங்கள் வைரலாகி வருகின்றன. தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' படத்தில் அனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்