< Back
சினிமா செய்திகள்
அனிகா சுரேந்திரனின் சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
சினிமா செய்திகள்

அனிகா சுரேந்திரனின் சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தினத்தந்தி
|
9 May 2023 6:09 PM IST

அனிகாவ அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த வகையில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவது வழக்கம்

சென்னை

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வந்தார். இவரை தமிழில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியது டைரக்டர் கவுதம் மேனன் தான். அவர் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தார் அனிகா.

இவர்கள் இருவருக்கும் இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதால் விஸ்வாசம் படத்திலும் அனிகாவை அஜித்தின் மகளாக நடிக்க வைத்தார் டைரக்டர் சிவா.இப்படத்திற்கு பின்னர் அவரை குட்டி நயன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

நடிகை அனிகாதற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட பொம்மா. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா எனும் காதல் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக அனிகா ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் ஓ மை டார்லிங். மலையாளத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். ரொமாண்டிக் திரைப்படமான இதை ஆல்பிரட் டி சாமுவேல் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகவும் வைரல் ஆனது. இதற்கு காரணம் இப்படத்தில் அனிகா ஏராளமான உத்தட்டோடு உதடு கொடுக்கும் லிப்லாக் காட்சியில் நடித்து இருந்தார்.

இந்த் நிலையில் இணையத்திலும் படு ஆக்டிவாக இருக்கும் அனிகாவின் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த வகையில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள அனிகாவின் புகைப்படம் ஒன்று சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அதாவது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றில் அனிகா சுரேந்திரனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில், செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்டது என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்