சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'அந்தகன்' படக்குழு
|சுதந்திர தினத்தை முன்னிட்டு 'அந்தகன்' படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சில சிக்கல்களால் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த 'அந்தகன்' திரைப்படம் ஆகஸ்ட் 9 ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். நடிகை சிம்ரன் படத்தில் வில்லியாக நடித்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் இந்த படமானது வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் ஏற்படும் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 'அந்தகன்' படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.