அனன்யா பாண்டேவின் முதல் வெப் தொடர்: 'கால் மீ பே' டிரெய்லர் வைரல்
|'கால் மீ பே' தொடரின் டிரெய்லர் வெளியானது.
சென்னை,
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. அதன் பிறகு பதி பத்னி அவுர் வா போன்ற படங்களில் நடித்தார். மேலும், நடிகை அனன்யா பாண்டே 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 'கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும் வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது முதல் வெப் தொடரில் நடித்துள்ளார். இதற்கு கால் மீ பே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தொடரின் முதல் எபிசோட் அடுத்த மாதம் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் 6-ம் தேதி வெளியாக உள்ளது. இது வரை படங்களில் மட்டுமே நடித்து வந்த அனன்யா பாண்டே தற்போது வெப் தொடரில் நடித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடையவைத்துள்ளது.