'எனது அழகான மருமகன்'... வீடியோ வெளியிட்டு தெரிவித்த அனன்யா பாண்டே
|அனன்யா பாண்டேவின் உறவினரான அலன்னாவிற்கு குழந்தை பிறந்துள்ளது.
மும்பை,
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. அதன் பிறகு பதி பத்னி அவுர் வா போன்ற படங்களில் நடித்தார். பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாலிவுட்டில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவரது உறவினரான அலன்னாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன், 'எனது அழகான மருமகன் இங்கே' என்று பதிவிட்டுள்ளார்.
அலன்னா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஐவர் மெக்ராவுடனான திருமணத்தை உறுதி செய்தார். அலன்னா கடந்த பிப்ரவரியில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.