< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அம்பானி வீட்டு திருமணம்: நாட்டு ...நாட்டு... பாடலுக்கு நடனம் ஆடிய பாலிவுட் கான்கள்
|3 March 2024 7:44 PM IST
பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர்.
தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவை முன்னிட்டு 2- ம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை குஜராத் ஜாம்நகரில் உள்ள வீட்டில் நடந்தது.
இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர். இதில் இந்தி பட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள். வண்ண குர்தா உடையில், 3 கான்கள் ஒரே பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.