ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி - பங்கேற்ற பிரபலங்கள்
|ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மும்பை:
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாகவே கலைக்கட்டி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் என சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தினார். மேலும், பல நடிகர், நடிகைகள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை களைகட்ட வைத்தனர்.
அதன்படி இதில், ரன்பீர் கபூர்-ஆலியா பட், தீபிகா படுகோன் - ரன்வீர் சிங், அட்லீ- பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திஷா பதானி, கியாரா அத்வானி, ஜான்வி கபூர், மாதுரி தீட்சித், வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.